தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்


UPDATED : அக் 08, 2026 09:19 PM

ADDED : அக் 08, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:19 PM ADDED : அக் 08, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபால்பட்டி: கோபால்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை, தேங்காய் தொட்டிக்கான மறைமுக ஏலம் நடந்தது.

சாணார்பட்டி, கனவாய்ப்பட்டி, வேம்பார்ப்பட்டி சுற்று வட்டார விவசாயிகள், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப கிலோ அதிகபட்சமாக ரூ.148.5-க்கும் குறைந்தபட்சமாக ரூ.130-க்கும் ஏலம் போனது. மொத்தம் 248.75 கிலோ கொப்பரை ரூ.36 ஆயிரத்து 940க்கு ஏலம் போனது.

ஏலத்தை மேற்பார்வையாளர் முகமது யாசின், மண்டி ஆய்வாளர் ராவணேஷ்வரன் ஆகியோர் நடத்தினர். விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கமிஷன் இன்றி விற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை ஏலம் மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.152.50-க்கும் குறைந்தபட்சமாக ரூ.100-க்கும், தேங்காய் தொட்டி கிலோ அதிகபட்சமாக ரூ.29.25-க்கும் குறைந்தபட்சமாக ரூ.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 545 கிலோ கொப்பரை தேங்காய் வரப்பெற்று ரூ.3.75 லட்சத்திற்கு ஏலம் போனது.

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளர் கீதா தலைமையில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.145.50-க்கும் குறைந்தபட்சமாக கிலோ ரூ.137-க்கும் ஏலம் போனது. 78 கிலோ கொப்பரை தேங்காய்கள் வரப்பெற்று ரூ.11 ஆயிரத்து 77-க்கு ஏலம் போனது. இளநிலை உதவியாளர் கண்ணன், விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us