UPDATED : அக் 15, 2026 09:43 PM
ADDED : அக் 15, 2026 09:24 PM
நத்தம்: நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.157-க்கும் குறைந்தபட்சமாக ரூ.125-க்கும் ஏலம் போனது. 5 ஆயிரத்து 882 கிலோ கொப்பரை தேங்காய் வரப்பெற்றதில் ரூ.8.60 லட்சத்திற்கு ஏலம் போனது. இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், சுற்றுவட்டார விவசாயிகள், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பங்கேற்றனர்.
கோபால்பட்டி: கோபால்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை, தேங்காய் தொட்டிக்கான ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப கிலோ அதிகபட்சமாக ரூ.139-க்கும் குறைந்தபட்சமாக ரூ.130-க்கும் ஏலம் போனது. 132.50 கிலோ கொப்பரை வரப்பெற்றதில் ரூ.18 ஆயிரத்து 418-க்கு ஏலம் போனது. ஏலத்தை விற்பனைக் கூட மேற்பார்வையாளர் முகமதுயாசின், ஆய்வாளர் ராவணேஸ்வரன் நடத்தினர்.
