/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடன் பிரச்னையில் தம்பதி தற்கொலை
/
கடன் பிரச்னையில் தம்பதி தற்கொலை
ADDED : செப் 03, 2025 01:13 AM
அம்பிளிக்கை:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கடன் பிரச்னையில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே வெரியப்பூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி 55. அவரது மனைவி பரிபூரணம் 47. இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வந்தனர். மகன் காளிமுத்துக்கு 23, சில மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைத்தனர். வேலுச்சாமி, பரிபூரணமும் மகனின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்தனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கடன் கொடுத்தவர்கள் கடனைக்கேட்டு தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டனரா என அம்பிளிக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.