ADDED : மார் 18, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள தலைவர்களின் சிலையை மறைக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் நகரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை,பெரியார் சிலை,காமராஜர்சிலை, அண்ணா சிலைகளில் வெள்ளை துணிகளால் மறைக்கப்பட்டது.
பெயர் பலகைகள்,சுவர் விளம்பரங்கள்,டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்,உதவி பொறியாளர் தியாகராஜன்,சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

