/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரேன் சாய்ந்து லாரி, மின்கம்பம் சேதம்
/
கிரேன் சாய்ந்து லாரி, மின்கம்பம் சேதம்
ADDED : அக் 06, 2025 04:34 AM

வேடசந்தூர் : வேடசந்தூர் நேருஜி நகரில் மினி லாரி, சகதியில் பதிந்ததால் கிரேன் வைத்து தூக்கினர். கிரேன் சாய்ந்ததில் லாரி மற்றும் மின்கம்பம் சேதமானது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரவீன் 28. இவர் தன் நெல் அறுவடை இயந்திரத்தை, சீசன் பணிகளுக்காக ஓர் மினி வேனில் ஏற்றி, தஞ்சாவூர் நோக்கி வேடசந்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார். லாரியை தஞ்சாவூரைச் சேர்ந்த டிரைவர் நந்தகுமார் ஓட்டிச் சென்றார்.
வேடசந்தூர் நேருஜி நகர் அருகே சென்றபோது, நள்ளிரவு நேரம் ஆனதால் ஓய்வெடுக்கும் பொருட்டு மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் பிரிந்து செல்லும் ரோட்டில் ஓரமாக நிறுத்தினர். அப்போது லாரி, மழை பெய்த காரணத்தால், ரோட்டோர சகதியில் மாட்டியது. இதனால், வேடசந்தூரில் உள்ள தனியார் கிரேனை அழைத்து வந்து, லாரியை இழுத்து நகர்த்த முயற்சித்தனர். அப்போது கிரேனின் முன்பகுதி (இழுவைப் பகுதி) உயர்த்திய நிலையில், மின் கம்பியில் மாட்டி இழுத்து மின்கம்பத்தை சாய்த்தது. மின்கம்பம் லாரியில் விழுந்ததில் முன் பகுதி சேதமானது. தொடர்ந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.