/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி
ADDED : ஆக 05, 2025 04:28 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வென்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., மைதானங்களில் நடந்தது.
திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 233/5. தீபன் 79, வினோத்குமார் 50(நாட்அவுட்), முகமது யூசுப் 38, விக்னேஷ் 32 (நாட்அவுட்). சேசிங் செய்த ஹரிவர்ணா சிசி அணி 39.2 ஓவர்களில் 181க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. கவுதம் 45, பனபாண்டி 35, கிேஷார்குமார் 25, விக்னேஷ் 4 விக்கெட். விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 26.5 ஓவர்களில் 108 க்கு ஆல் அவுட் ஆனது. பாலாஜி 5, மதன்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் சிசி அணி 25.5 ஓவர்களில் 77க்கு ஆல் அவுட் ஆகி தோற்றது.
கார்த்திக்சரண் 5, ராம்திலக் 3 விக்கெட். திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்டஸ் கிளப் ஜூனியர்ஸ் சிசி அணி 40 ஓவர்களில் 216/5. ேஹமந்த் 79, ஸ்ரீமுரளிஸ்வரன் 65 (நாட்அவுட்), நரேன்விமல் 32(நாட்அவுட்), தஷ்வின் 3 விக்கெட். சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ஸ் கிளப் அணி 40 ஓவர்களில் 203/9 எடுத்து தோற்றது. முகமதுயூசுப் 53, கார்த்திக் சரண் 52, ராம்திலக் 34, மாதேஸ்வரன் 4 விக்கெட்.
முதலாவது டிவிஷன்சூப்பர் லீக் போட்டிகளில்விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி,விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் அணி ,ஜாஹிர் அணி தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றனர்.விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடம், விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் ,ஜாஹிர் அணி 8 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தது.