/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராட்சிகளுக்கான பராமரிப்பு நிதி குறைப்பால் நெருக்கடி; அடிப்படை வசதிகளை செய்யமுடியாது தவிப்பு
/
ஊராட்சிகளுக்கான பராமரிப்பு நிதி குறைப்பால் நெருக்கடி; அடிப்படை வசதிகளை செய்யமுடியாது தவிப்பு
ஊராட்சிகளுக்கான பராமரிப்பு நிதி குறைப்பால் நெருக்கடி; அடிப்படை வசதிகளை செய்யமுடியாது தவிப்பு
ஊராட்சிகளுக்கான பராமரிப்பு நிதி குறைப்பால் நெருக்கடி; அடிப்படை வசதிகளை செய்யமுடியாது தவிப்பு
ADDED : பிப் 03, 2026 05:57 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு நிதி மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்படுவதால் ஊராட்சி நிர்வாகங்களை நடத்த முடியாமல் தத்தளிப்பதாக குமுறல் எழுந்துள்ளது. போதிய நிதியை ஒதுக்க மாநில அரசு முன் வர வேண்டும்.
மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கான பராமரிப்பு நிதி மாநில நிதி குழு மானிய நிதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்து தான் குடிநீர் பைப் லைன், மின் மோட்டார்கள், தெரு விளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. தற்போது தற்காலிகமாக நியமிக்கப்படும் மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கும் நிதியில் இருந்து தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வளவு தேவைகள் இருக்க உள்ளாட்சி தலைவர்கள் இருந்த காலகட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு குறைந்தது ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கினர். அதனால் அன்றைய காலகட்டத்தில் பராமரிப்பு பணிகள் எளிதாக இருந்தது. தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைத்து பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு எந்தப் பணிகளையும் செய்ய முடியவில்லை என்கின்றனர் ஊராட்சி செயலர்கள். 100 நாள் வேலை திட்டத்திற்கான வேலை நாட்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான சம்பளமும் இன்னும் வழங்கப்படவில்லை . ஊராட்சிகளின் பராமரிப்பு நலன் கருதி நிதியை முறையாக முன்பு போல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
......
அரசின் பாரபட்சத்தால் அவதி
தற்போது வறட்சி காலம் தொடங்கிய நிலையில் மக்களின் குடிநீர் தேவைகள் அதிகரித்துள்ளது. அப்படி இருக்கும் போது, மின்மோட்டார் பைப் லைன் பராமரிப்பு, தற்காலிக ஊழியர்களுக்கு என கூடுதல் நிதி தேவை. தலைவர்கள் பொறுப்பில் இருந்தபோது அனுப்பிய நிதி அளவிற்கு தானே இப்போதும் தேவைப்படும். அப்போது போதிய நிதியை அனுப்புவதும் தற்போது குறைத்து அனுப்புவதும் ஏன். இதிலே அரசின் பாரபட்சம் தெரிகிறது. கூடுதல் நிதி ஒதுக்கி 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கான சம்பளத்தை, வாராவாரம் முறையாக வழங்க வேண்டும். 100 நான் திட்ட தொழிலாளர்களுக்கு ம்பளம் வழங்கவில்லை என்றால் குடும்பத்தை எப்படி சமாளிப்பது. மத்திய மாநில அரசுகள், ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக அனுப்ப வேண்டும் .
இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்.
......

