/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பம்மாள்பட்டியில் காட்டு யானை; விவசாய பயிர்கள் சேதம்
/
குப்பம்மாள்பட்டியில் காட்டு யானை; விவசாய பயிர்கள் சேதம்
குப்பம்மாள்பட்டியில் காட்டு யானை; விவசாய பயிர்கள் சேதம்
குப்பம்மாள்பட்டியில் காட்டு யானை; விவசாய பயிர்கள் சேதம்
ADDED : ஆக 21, 2025 08:29 AM

தாண்டிக்குடி : தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டியில் முகாமிட்டுள்ள காட்டுயானையால் விவசாய பயிர்கள் சேத மடைந்தன.
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பம்மாள்பட்டியில் சில தினங்களாக 3க்கு மேற்பட்ட காட்டு யானைகள் உலாவுகிறது. விவசாய தோட்டங்களில் புகுந்து மலைவாழை, காபி, ஆரஞ்சு, சவ்சவ் பந்தல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. பாச்சலுார் பெரியூர் பள்ளத்துகால்வாய், ஆடலுார், பன்றிமலை, தடியன்குடிசைபகுதிகளில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். வன விலங்கு நடமாட்டத்தால் உயிர் பலி, விவசாய பயிர்கள் சேதம் அடைவது குறித்து வனத்துறை கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.