நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண் கல்லுாரி மாணவியர், கிராமத் தங்கள் திட்டத்தில் ஆத்துார் பகுதியில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். ஆத்துாரில் உலக பயிர்கள் தின விழா நடத்தினர்.
வேளாண் துறையில் பயிர்களின் முக்கியத்துவம், உயிர் காப்பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர் வகைகள், அவற்றின் நன்மைகள், சாகுபடி நுட்பங்கள் குறித்து மாணவியர் பொன்ஆர்த்திசெல்வி, பிரமிளா, ப.பிரீத்தா, கவியரசி, லாவண்யா, மகேஸ்வரி, மீனாட்சி, ரா.பிரீத்தா, ரீனா ஆகியோர் விளக்கினர். பயிர் பாதுகாப்பு முறைமைகள் பற்றி விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.--

