ADDED : ஜூன் 22, 2026 03:15 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இக்கோயிலுக்கு ஏராளமான வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
