/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
/
பழநி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
ADDED : ஜன 05, 2026 05:46 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பாத யாத்திரை பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் வெளிப் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர். மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ரோப் கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து, கோயில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அடிவாரம் அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, இடும்பன் இட்டேரி ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் போக்குவரத்து நெரிசலால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
கிரிவீதியில் கோயில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ள இடங்களான இலவச கழிப்பிடம், குடிநீர் வசதி, பேட்டரி கார் நிற்கும் இடங்கள், இலவச முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் குறித்து ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் குழப்பம் இன்றி செல்ல வழிகாட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

