ADDED : பிப் 11, 2026 06:20 AM

அ நிறம் | அளவு
நத்தம்: அப்பாஸ்புரம்-பள்ளபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் 46. முன்னாள் பா.ஜ., நிர்வாகியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும் 37, இடம் தகராறில் முன்விரோதம் இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதில் செல்வராஜ் தரப்பினர் பாலமுருகனை தாக்கினர்.
ஆத்திரத்தில் பாலமுருகன் நேற்று செல்வராஜை அரிவாளால் வெட்டினார். இவரை நத்தம் -இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் கைது செய்தார்.
