UPDATED : செப் 12, 2026 07:34 PM
ADDED : செப் 12, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
நத்தம்:நத்தம் -கோவில்பட்டி கீழத்தெரு பகவதி அம்மன் கோயிலில் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
முன்னதாக அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி கீழத்தெரு மக்கள் செய்திருந்தனர்.
