ADDED : ஜூன் 22, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி:கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் தினமலர் செய்தி எதிரொலியாக சேதமடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் மாற்றினர்.
கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி செடிப்பட்டி பிரிவு வேம்பார்பட்டி ரோட்டில் மின்கம்பத்தின் மேல் பகுதி சிமென்ட் பூச்சிகள் பெயர்ந்து சேதமடைந்து தினமலர் நாளிதழ் நாலு படம் நாலு வரி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நிறுவ உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சேதமான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை மின்வாரிய பணியாளர்கள் மாற்றினர்.