/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகள்... இடியும் நிலையில் குடியிருப்புகள்
/
சேதமான ரோடுகள்... இடியும் நிலையில் குடியிருப்புகள்
சேதமான ரோடுகள்... இடியும் நிலையில் குடியிருப்புகள்
சேதமான ரோடுகள்... இடியும் நிலையில் குடியிருப்புகள்
ADDED : ஜூலை 15, 2025 04:07 AM

தவியாய் தவிக்கும் வேம்பார்பட்டி ஊராட்சி மக்கள்
சாணார்பட்டி: வேம்பாரப்பட்டி ஊராட்சி மொட்டையகவுண்டன்பட்டி, செடிப்பட்டி கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
வேம்பார்பட்டியில் சேதமடைந்த அரசு குடியிருப்பில் தங்கி உள்ள மக்கள் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் இரவில் துாங்குகின்றனர்.
வேம்பார்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 35க்கு மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன.
அனைத்து வீடுகளின் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்குகிறது. பெரும்பாலான வீடுகளின் சுவர் சேதமடைந்து வரும் நிலையில் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மழைக்காலங்களில் மழை நீர் வீட்டுக்குள் ஒழுகுவதால் மக்கள் கடும் அவதியை அனுபவிக்கின்றனர்.
மொட்டையகவுண்டன்பட்டி, செடிப்பட்டி இரு கிராமங்களுக்கு செல்லும் ரோடு,வேம்பார்பட்டியில் இருந்து கன்னியாபுரம் செல்லும் ரோடு ஜல்லிகற்கள் அனைத்தும் பெயர்ந்து மண் சாலை போல் உள்ளது.
சாலை சேதமடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் சாலை இன்னும் புதுப்பிக்காததால் இதில் பயணிக்கும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள் பாதிக்கின்றனர். செடிப்பட்டி மயானத்திற்கு செல்லும் ரோடும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
பெயர் ந்து விழு கிறது
சி.ஆர்.ஹரிஹரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், வேம்பார்பட்டி: வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது.
35க்கு மேற்பட்ட குடியிருப்புகளின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழும் நிலையில் குடியிருப்புகளில் மக்கள் தொடர்ந்து வசிக்கின்றனர்.
அரசு கட்டிக் கொடுத்த குடியிருப்புகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து குடியிருப்புகளிலும் கூரை சேதம் அடைந்துள்ளதால் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது.
நடவடிக்கை இல்லை
சோ.ஆனந்தகிருஷ்ணன், பா.ஜ., ஐடி பிரிவு மாநில துணைத்தலைவர், வேம்பார்பட்டி: வேம்பார்பட்டி ஊராட்சியில் உள்ள செடிப்பட்டி, மொட்டையகவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து பல மாதங்களுக்கு மேலாகிறது.
இதில் பயணிக்கும் கிராம மக்களும் பள்ளி மாணவர்களும் தினமும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
மழை காலங்களில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் ஒழுகுகின்றன. ஆய்வு செய்கிறார்களே தவிர பராமரிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.