sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எலும்புக்கூடு போன்று மாறிய மின்கம்பத்தால் ஆபத்து

/

எலும்புக்கூடு போன்று மாறிய மின்கம்பத்தால் ஆபத்து

எலும்புக்கூடு போன்று மாறிய மின்கம்பத்தால் ஆபத்து

எலும்புக்கூடு போன்று மாறிய மின்கம்பத்தால் ஆபத்து


ADDED : பிப் 14, 2025 05:47 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாழ்வாக செல்லும் கேபிள் ஒயர்கள் : திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே கேபிள் ஒயர்கள் தாழ்வாக உள்ளதால் இரவில் நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கழுத்தில் சுற்றி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஒயரை ஒழுங்குபடுத்த வேண்டும்.

--பாரதி, திண்டுக்கல்.

சேதமான மின் கம்பம் : பழநி சாமி தியேட்டர் அருகே மின்கம்பம் சேதம் அடைந்து சிமென்ட் பூச்சு கம்பி வெளியே தெரிவதால் அருகே செல்லவே அச்சப்படுகின்றனர். போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.

-பீர்முகமது பழநி.

போக்குவரத்துக்கு இடையூறு : திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் சாக்கடையை துார்வாரி மண் குவித்து வைக்கப்பட்டு பல நாட்களாகியும் அகற்றாததால் அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது .மண்ணை அகற்ற வேண்டும்.

-முருகன், திண்டுக்கல்.

எரியாத தெருவிளக்குகள் : பழநி12 வது வார்டு ராஜாஜி ரோடு 1வது தெருவில் மின் விளக்கு இரவு நேரங்களில் எரியாததால் அப்பகுதியில் இருளில் மூழ்கியுள்ளது. பொதுமக்கள் பாதிப்பதால் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேல்முருகன், பழநி.

சாலையில் கட்டட இடிபாடு : திண்டுக்கல் திருச்சி ரோடு நான்கு வழி சாலையில் கட்டட இடிபாட்டுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது .கட்டட இடிபாடு பொருட்களை கொட்டுவதை தடுப்பதோடு இவற்றை அகற்ற வேண்டும்.

-கோபிநாத், திண்டுக்கல்.

பெயர் பலகையில் போஸ்டர்கள் : திண்டுக்கல் அருகே குள்ளனம்பட்டி மேல்நிலைத் தொட்டி பெயர் பலகையில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் அசுத்தமாக உள்ளது. பலகையும் சேதமடைந்துள்ளது . பலகையை புதுப்பிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிச்சாமி, திண்டுக்கல்.

சாக்கடையில் அடைப்பு : சத்திரப்பட்டி அருகே விருப்பாச்சியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது . துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது .கழிவு நீர் தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

-சின்னத்தம்பி, விருப்பாட்சி.






      Dinamalar
      Follow us