தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்கம்ப விளம்பர பலகைகளால் காத்திருக்கு ஆபத்து

 மின்கம்ப விளம்பர பலகைகளால் காத்திருக்கு ஆபத்து

 மின்கம்ப விளம்பர பலகைகளால் காத்திருக்கு ஆபத்து


ADDED : ஜன 09, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரத்தில் அடிக்ககப்படும் ஆணி

சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள மரத்தில் ஆணியடித்து விளம்பர பலகைகளை அதிக அளவு வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளி, கே.அய்யாபட்டி.

...........-------வாய்க்காலில் குப்பை

பழநி அடிவாரம் பாலசமுத்திரம் ரோட்டில் உள்ள வாய்க்காலில் குப்பை கொட்டி குவிந்து உள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது . மகேந்திரன், பழநி.

........-------மின்கம்பத்தில் விளம்பர பலகை

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் ஆபத்து என்று தெரிந்தும் மின்கம்பம் முழுவதும் விளம்பர பலகை அமைத்துள்ளனர் .இதை அகற்ற மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவேக், திண்டுக்கல்.

............------- சேதமான போர்வெல் தொட்டி

பழநி நகராட்சி 28 வது வார்டில் போர்வெல் தொட்டி சேதமாகி உள்ளது .நீன்ட நாட்கள் ஆகியும் சரி செய்யபடாமல் உள்ளது .பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர் .சீனிவாசன், திலகர்வீதி.............-------பயன்பாடற்ற கழிப்பறை

சாணார்பட்டி அருகில் மடூரில் ஆண்கள், பெண்கள் கழிப்பறை பயன்பாடு இன்றி பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் .கட்டடத்தை பராமரித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி, திண்டுக்கல்............--------சுகாதார நிலையத்தில் புதர்

சின்னாளபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிழக்கு புற நுழைவாயிலை பயன்பாடின்றி பூட்டி வைத்திருப்பதால் புதர்ச்செடிகள் மண்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. -ஜி.மணிவேல் சின்னாளப்பட்டி.

..............--------

மிரட்டும் புளிய மரம்

அய்யலுார் மணியக்காரன்பட்டியில் விபத்து அபாயத்துடன் காய்ந்து போன புளிய மரம் உள்ளது. இதன் அருகில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். விபத்துக்கு காத்திருக்கும் இதனை அகற்ற வேண்டும். -- தங்கவேல், அய்யலுார்.

.........

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us