/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்னல் தரும் இருள்; உதவாத உள்ளாட்சிகள்
/
இன்னல் தரும் இருள்; உதவாத உள்ளாட்சிகள்
ADDED : அக் 23, 2025 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய ரோடுகள், தெருக்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இருக்கிற விளக்குகளும் முறையான பராமரிப்பின்றி எரியாமல் உள்ளன. இதன் காரணமாக மக்கள் குறிப்பாக பெண்கள் இரவில் வெளியே வர அச்சப்படுகின்றனர். பாதசாரிகளும் பெரும் பாதிப்பினை சந்திக்கின்றனர். டூவீலர் ஓட்டிகள் தங்களது வாகன விளக்கை நம்பி வெளியே செல்கின்றனர். இதை பராமரிக்க வேண்டிய உள்ளாட்சிகள் துாக்கத்தையே கடைப்பிடிக்கின்றன. இதில் மாவட்ட நிர்வாகம்தான் கவனம் கொள்ள வேண்டும்.