ADDED : நவ 15, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி, கோதைமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் 48. இவர் வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் புதிய அறை கட்ட, கடப்பாரையால் அஸ்திவாரம் எடுத்து உள்ளார். அப்போது அங்கு நிலத்திற்கு கீழே சென்ற மின் ஒயரின் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமார் உயிரிழந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

