ADDED : ஏப் 26, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்:திருச்சிமாவட்டம்  வையம்பட்டி  கருங்குளத்தை  சேர்ந்த  அற்புதராஜ் 36,  அகஸ்டின் பிரபு 26,  ராபர்ட் 32,  ஜான் கென்னடி 29, சின்னப்பன் 34,  ஜெயக்குமார் 32, ஆகிய 6 பேர்  காரில் கேரளா சென்று விட்டு பிப்.16 ல்   ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
வேடசந்துார்  அருகே வந்த போது லாரி மீது கார் மோதியதில்  சின்னப்பன், அகஸ்டின் பிரபு,   ராபர்ட் இறந்தனர். காயமடைந்த    ஜான்கென்னடி நேற்று  இறந்தார்.  இதைத்தொடர்ந்து  இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.

