ADDED : ஜூலை 07, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அருகே கோசுகுறிச்சியை சேர்ந்தவர் பாரூக்முகமது 60.
இவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்துவழிதவறி வந்த புள்ளி மான் கன்று எதிர்பாராத விதமாக தவறிவிழுந்தது. தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட வீரர்கள் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி 1 மணி நேரம் போராடி கயிற்றின் மூலமாக குட்டி மானை மீட்டனர். வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்ட மான் பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.