ADDED : ஆக 23, 2026 12:35 AM

வடமதுரை: கொன்னையம்பட்டியில் அரசு இடத்தில் புதிய பாலம், பாதை அமைக்கும் பணி ஓராண்டு தாமதத்துடன் துவங்கி நடக்கிறது. புத்துார் வறட்டாறு குறுக்கிடுவதால் கொன்னையம்பட்டி கிராமம் மழை நேரத்தில் துண்டிக்கப்படுக்கிறது. இந்த ஊருக்கு பாதை வசதியின்றி தனியார் இடம் வழியே சென்று வருவதால் பல ஆண்டுகளாக சண்டை, சச்சரவுகளும் உள்ளன.இப்பிரச்னை குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது. அதன் பலனாக 2025 துவக்கத்தில் அரசு இடம் வழியே புதிய வழித்தடம், பாலம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.
இங்கு பாலம், ரோடு உருவாவதை விரும்பாத சிலர் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் டெண்டர் விட்டு பூமி பூஜை நடந்து ஓராண்டிற்கு மேலாகியும் பணி துவங்கப்படாமல் இருந்தது. தற்போது அனைத்து தடைகளும் அகற்றப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி துவங்கி மும்முரமாக நடக்கிறது.
