UPDATED : அக் 08, 2026 12:41 AM
ADDED : அக் 08, 2026 12:38 AM
வேடசந்துார்: வேடசந்துார் – கரூர் நெடுஞ்சாலையில் ரங்கநாதபுரம் அருகே விபத்துக்களை தடுக்க உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நெடுஞ்சாலையில் ரங்கநாதபுரம் அருகே உள்ள ஓட்டல் முன் ரோட்டின் குறுக்காக போக்குவரத்திற்கான வழி விடப்பட்டு இருந்தது. இங்கு ரோடு வளைவாக இருந்த நிலையில் விபத்துக்கள் நடந்த வண்ணம் இருந்தது.
தொடர்ந்து மாற்று நடவடிக்கையாக அவ்வழித்தடம் அடைக்கப்பட்டு சற்று தொலைவில் ரங்கநாதபுரம் அருகே மெயின் ரோட்டின் குறுக்காக வழித்தடம் விடப்பட்டது. இந்த இடம் தற்போது பாதுகாப்பாக உள்ளது.
ஆனாலும் இங்கு இதுவரை எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கவில்லை. அதேபோல் உயர் கோபுர மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் ரோட்டை கடந்து செல்வதில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களும் இந்த இடத்தில் ‘கட் ரோடு’ என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் விபத்தில் சிக்க வாய்ப் புள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த இடத்தில் எச்சரிக்கை பலகையை வைக்கவும், உயர்கோபுர மின்விளக்கு வசதியை ஏற்படுத்தவும் முன்வர வேண்டும்.
