நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அகரம் முத்தாலம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு அங்கு பொதுமக்கள் செல்ல வசதியாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இதில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படுவதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வாலிபர் சங்க நகர செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார்.