நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனை முறையை திரும்ப பெற வேண்டும். அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சம்பள பாக்கியை வழங்க வேண்டும்.
ஊரக வேலை சட்டத்தை திருத்துவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அம்மையப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ் மருதை முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வசந்தாமணி பேசினார்.