
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ பதிவுக்கு புதிய அலைபேசிகளை வழங்க வேண்டும். ஊக்கத்தொகை ரூ. 5000 வழங்க வேண்டும் ,பயனாளர்களின் விவரங்களை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் ,உதவியாளர் சங்கம் சார்பில் பழநி அனைத்து வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் ரம்ஜான் பேகம் தலைமை வகித்தார். சங்க செயலாளர் அம்பிகாபதி பங்கேற்றார் .

