நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: அய்யலுார் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் வேறு பகுதிக்கு இடம் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல பொறுப்பாளர் ஐஸ்டின் பங்கேற்றனர்.
பழநி : ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான மடத்தினை தனியாருக்கு பட்டா வழங்கிய வருவாய் அலுவலர்களை கண்டித்து, பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை வகித்தார். இதன் பின் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

