நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள் இல்லாததை கண்டித்து தமிழக அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
மாவட்டத்தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர்கள் முத்துலட்சுமி, வீரைய்யா பங்கேற்றனர்.

