நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ணைக்காடு: கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோடு பண்ணைக்காடு பேரூராட்சி ஊத்து பிரிவில் தனியார் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் சுற்றுப்புற கிராமத்தினர் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது வழக்கம். இங்கு அடிக்கடி பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை உள்ளது.
நேற்று பங்க்கிற்கு வந்த வாகனங்களுக்கு பம்பிங் மிஷினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பெட்ரோல் சப்ளை இல்லை என தெரிவித்தனர். வாகனஓட்டிகள் பங்க் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாண்டிக்குடி போலீசார் பேச்சு நடத்திய பின் பெட்ரோல் வழங்கப்பட்டது.

