UPDATED : செப் 10, 2026 10:29 PM
ADDED : செப் 10, 2026 07:14 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் நிறுவன தலைவர் தர்மா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேஷ்பாண்டியன், வேடசந்துார் தொகுதி பொறுப்பளர் மருதுபாண்டியன், மாநில நெசவாளர் அணி தலைவர் ஹரி, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், சட்டசபையில் மாநில வளர்ச்சி பணிகள் குறித்து பேசாத த.வெ.க., தி.மு.க.,வை கண்டித்தும், கட்சத்தீவில் உள்ள ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான முனியப்பனார் கோயில் வளாகத்தில் சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) சுல்தான் சிக்கந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
