UPDATED : செப் 12, 2026 09:44 PM
ADDED : செப் 12, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் வத்தலக்குண்டு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அப்தாகிர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமதாஸ், முகமது அலி முன்னிலை வகித்தனர். அரசு துறைகளில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆட்டோ கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் முகமது ரபீக், நாகராஜ் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.
