ADDED : செப் 21, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை, செப்.22
மதுரையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மர்ம மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குஜிலியம்பாறை அருகே பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமை விதித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ராமு, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் பேசினர்.
