ADDED : நவ 28, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
எரியோடு:
கோவிலுாரில் இருந்து காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரையில் திண்டுக்கல்லிற்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
நல்லுார், நவக்குளம், செல்லக்குட்டியூர், பெருமாள்கோவில்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, கதிரனம்பட்டி ஆகிய கிராமங்களில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும். திடீர் நகர் ஓடையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வாய்க்கால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராணி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
