ADDED : செப் 23, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடப்பதாக வட்டார மருத்துவ அலுவலர் ரோகித் தெரிவித்து உள்ளார்.
குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகள், பாளையம் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு முகாம்கள் நடந்து வருகிறது. கொசுப்புழுக்களை கண்டறிந்து ஒழித்தல், புகை மருந்து அடித்தல், குளோரின் கலந்த குடிநீர் விநியோகம் நடக்கிறது.
காய்ச்சல் கண்டறிந்த கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மருத்துவ சேவைகளை பொது சுகாதாரத்துறையினர் வழங்கி வருகின்றனர்.
கல்வித்துறை மூலம் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது என வட்டார மருத்துவ அலுவலர் ரோகித் தெரிவித்து உள்ளார்.
