ADDED : செப் 19, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
நத்தம், செப்.20
நத்தம் அரசு விடுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் அஜாம் மேற்பார்வையில் துரைக்கமலம் அரசு மாதிரி பள்ளி, அரசு பெண்கள் பள்ளி, செந்துறை சமூக நீதி மாணவியர் விடுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. விடுதிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோரினேசன் பவுடர் தெளிக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
