ADDED : ஜன 04, 2026 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: அய்யம்பாளையம் ஊராட்சிநல்லண்ணகவுண்டன் புதுாரில் ரூ.41.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடை, சின்ன கவுண்டன்புதுாரில் அங்கன்வாடி மையம்,ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
'என் வாக்குச்சாவடி வெற்றிச்சாவடி' தலைப்பில் அய்யம்பாளையம், காவலப்பட்டி, ஆர்.வாடிப்பட்டி, பகுதிகளில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.

