sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வளர்ச்சித் துறையினர் போராட்டத்தால் ரூ.100 கோடி திட்டப் பணிகள் பாதிப்பு

 வளர்ச்சித் துறையினர் போராட்டத்தால் ரூ.100 கோடி திட்டப் பணிகள் பாதிப்பு

 வளர்ச்சித் துறையினர் போராட்டத்தால் ரூ.100 கோடி திட்டப் பணிகள் பாதிப்பு


ADDED : பிப் 12, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 06:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.

''ஊராட்சிச் செயலாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கனவு இல்லத் திட்டத்திற்கான மானியத் தொகையை ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளான நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் பரிசீலிக்கும் வரையில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வேலை நிறுத்தம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வீரகடம்ப கோபு கூறியதாவது: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 680 பேரும், மாநிலத்தில் 12 ஆயிரம் பேர் பணிபுரிகிறோம். அவர்கள் அனைவரும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், அரசுக்கு நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என கூறுகின்றனர். அப்படி எனில் நிதி சாராத கோரிக்கைகளையாவது தமிழக அரசு உடனே நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். ஆனால் எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் இருக்கிறது. அரசின் கனவு இல்ல திட்டப் பயனாளிகள் தேர்வுக்காக பிப்.17ல் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. பணியாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் அந்த கூட்டமும் தள்ளி வைக்க வாய்ப்பு இருக்கிறது. வேலை நிறுத்த போராட்டத்தால் அரசின் கனவு இல்லத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை அரசுக்கு ஏற்படும். இதுபோன்று தோராயமாக ரூ.100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us