/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ரூ. 226.62 கோடியில் வளர்ச்சி பணிகள்
/
திண்டுக்கல்லில் ரூ. 226.62 கோடியில் வளர்ச்சி பணிகள்
திண்டுக்கல்லில் ரூ. 226.62 கோடியில் வளர்ச்சி பணிகள்
திண்டுக்கல்லில் ரூ. 226.62 கோடியில் வளர்ச்சி பணிகள்
ADDED : அக் 01, 2025 08:01 AM

தி ண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் தேவைக்கேற்ப அனைத்து நலத்திட்ட பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது. பொதுமக்களின் நலனை முக்கியமாக கொண்டு மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் கலெக்டர் சரவணன் வழிகாட்டுதல் படி மேயர், துணை மேயர் ராஜப்பா ,கவுன்சிலர்களை மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். இப்பணியில் ஆணையர் செந்தில் முருகன் தலைமையிலான அலுவலர்கள், பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிதியாண்டில் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் அமைத்தல் பணி ரூ.205 கோடி செலவில் நடைபெற்றுவருகிறது. அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யும் பணி ரூ.9 கோடி ,நவீன மீன் அங்காடி கட்டும் பணி ரூ.1 கோடி,வேடபட்டியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி ரூ.1.58 கோடி,ஆத்துார் தலைமை நீரேற்று நிலையத்தில் மோட்டார் பொருத்தும் பணி ரூ.2 கோடி,14.50கி.மீ., சாலைகள் புதுப்பிக்கும் பணி ரூ.6.40 கோடி,உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், சுகாதார வளாகம் கட்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் சத்துணவு கூடம் கட்டும் பணிகள் ரூ. 82லட்சம் ,சாலை அபிவிருத்தி பணிகள், வடிகால், பாலம் கட்டுதல் ,ஈமக்கிரியை கூடம் கட்டும் பணி ரூ. 82 லட்சம் என ரூ. 226.62 கோடி மதிப்பீட்டிலான திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- - இளமதி ஜோதிபிரகாஷ்மாநகராட்சி மேயர் திண்டுக்கல்.