தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்


UPDATED : மே 01, 2026 06:17 PM

ADDED : மே 01, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 06:17 PM ADDED : மே 01, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:பழநி முருகன் கோயிலில் சித்ரா பவுர்ணமி, தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது,கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். கிரி வீதியில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக இரண்டு பனை மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தன. அவற்றை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவில் இருந்ததால் முக்கிய ரோடுகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர.் இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us