தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் குவிந்த பக்தர்கள்

 பழநியில் குவிந்த பக்தர்கள்

 பழநியில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஏப் 13, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நேற்று திரண்டனர்.

வார விடுமுறையையொட்டி பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வந்திருந்தனர். கரும்பு தொட்டில் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக கோயிலுக்கு செல்ல ரோப்காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக உள்ள படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெயில் அதிகமாக இருந்ததால் கிரிவீதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us