ADDED : ஏப் 26, 2026 11:23 PM

அ நிறம் | அளவு
பழநி:வார விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து மேளதாளத்துடன் கிரிவீதியில் வலம் வந்தனர்.
வின்ச், ரோப் கார் மூலம் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
