ADDED : மே 31, 2026 11:53 PM

அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்த நிலையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர்.
கோயிலில் பொது , கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர். கூட்டம் அதகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கிரிவலப் பாதையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. கிரிவீதியில் பேட்டரி காரில் பக்தர்கள் முண்டியடித்து ஏறினர்.
