/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்த இடைப்பாடி பக்தர்கள்
/
பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்த இடைப்பாடி பக்தர்கள்
பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்த இடைப்பாடி பக்தர்கள்
பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்த இடைப்பாடி பக்தர்கள்
ADDED : பிப் 19, 2025 01:37 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவையொட்டி இடைப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் 15 டன் அளவுள்ள பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு இன்று படைக்கின்றனர்.
பழநியில் தைப்பூச திருவிழா பிப்., 14 ல் நிறைவுற்றது. இதையடுத்து இடைப்பாடியைச் சேர்ந்த பர்வத ராஜகுல பக்தர்கள் முருகன் கோயிலுக்கு வந்தனர். சர்க்கரை, பேரிச்சம்பழம், தேன், கற்கண்டு, நெய், ஏலக்காய், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் வந்த அவர்கள் பெரிய அண்டாக்களில் 15 டன் அளவு பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
கோயில் திருக்கல்யாண மண்டபம், அடிவாரம் தனியார் மடத்தில் பஞ்சாமிர்தம் தயாரித்த இவர்கள், இன்று சுவாமிக்கு படைத்து தரிசனம் செய்கின்றனர். இதையடுத்து இரவு முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் தங்குவர். இந்நடைமுறை பல ஆண்டுகளாக தொடருகிறது.