/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநிக்கு பறவை காவடி எடுத்து வால்பாறை பக்தர்கள் பரவசம்
/
பழநிக்கு பறவை காவடி எடுத்து வால்பாறை பக்தர்கள் பரவசம்
பழநிக்கு பறவை காவடி எடுத்து வால்பாறை பக்தர்கள் பரவசம்
பழநிக்கு பறவை காவடி எடுத்து வால்பாறை பக்தர்கள் பரவசம்
ADDED : பிப் 21, 2025 02:25 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறைச் சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.
இக்கோயிலில் தைப்பூச திருவிழாவை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த வந்த வண்ணம் உள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை 56 எஸ்டேட் பகுதி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து நேற்று வந்தனர்.
இவர்கள் 49 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வருகின்றனர்.
இந்தாண்டு இரண்டு கிரேன்களில் பறவை காவடி எடுத்து வந்தனர். சண்முக நதியில் அலகு குத்த ஒரு கிரேனில் ஒன்பது நபர்களும் மற்றொரு கிரேனில் ஏழு நபர்களும் பறவை காவடி எடுத்து வந்தனர். பறவை காவடியுடன் 10 பேர் 15 அடி நீளம் அலகு குத்தி வந்தனர்.
இத்துடன் பக்தர்கள் பால்காவடி, இளநீர் காவடி, மயில் காவடியும் எடுத்து வந்தனர். மேலும் முக்கிய வீதிகள் வழியாக கிரி வீதியில் வலம் வந்தனர்.
பின் கோயிலில் தரிசனம் செய்து புறப்பட்டனர்.