தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கடும் பனிப்பொழிவிலும் பக்தர்கள் பாதயாத்திரை

 கடும் பனிப்பொழிவிலும் பக்தர்கள் பாதயாத்திரை

 கடும் பனிப்பொழிவிலும் பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : ஜன 21, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி: கடும் பனிப்பொழிவு தொடரும் சூழலில் பழநி பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பாதையாத்திரை பயணம் ஆண்டுதோறும் மார்கழி முதல் வாரம் முதலே துவங்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதி மட்டுமின்றி தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற வெளி மாவட்ட பக்தர்களும், மெட்டூர்-மூலச்சத்திரம் வழியே பாதயாத்திரை செல்வர்.

ஜனவரியில் தைப்பூச விழா முடிந்த பின்பும், பங்குனி உத்திரம் வரை பக்தர்களின் பாதயாத்திரை பயணம் இருக்கும்.

இந்தாண்டு பக்தர்களின் வருகை 4 வாரங்களுக்கு முன் துவங்கியது. கொடைரோடு, செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.

முன்பு பகலில் ஓய்வு, மாலை முதல் மறுநாள் காலை வரை பயணம் தொடருவர். தற்போது பனி பொழிவால் இரவில் ஓய்வு எடுத்து பகல் நேரத்தில் பாதயாத்திரையை தொடர்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us