/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிவீதியில் இல்லை கழிப்பறை பக்தர்கள் அவதி
/
கிரிவீதியில் இல்லை கழிப்பறை பக்தர்கள் அவதி
ADDED : டிச 20, 2025 06:03 AM
பழநி: பழநி கிரி வீதியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
பழநி கிரிவீதியில் பாத விநாயகர் கோயில், குடமுழுக்கு மண்டபம், வீரதுர்க்கை அம்மன் கோயில், அழகு நாச்சியம்மன் கோயில், ரோப்கார் ஸ்டேஷன் உள்ள வடக்கு, கிழக்கு கிரி வீதியில் பக்தர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
இப்பகுதிகளில் போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால் பெண் பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமம் அடைகின்றனர். குளிர்காலமான இச்சமயத்தில் சர்க்கரை நோயாளிகள் சிரமம் அடைகின்றனர் .
கிரிவீதியில் தெற்கு கிரிவீதியில் ஆண்கள் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளது .ஆனால் இதை பக்தர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதில்லை. கிழக்கு கிரிவீதியில் உள்ள சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கழிப்பறை போதுமானதாக இல்லை. வடக்கு கிரிவீதி , கிழக்கு கிரிவீதியில் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக , நிரந்தர கழிப்பறை வசதிகளை அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

