/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் பக்தர்கள் குவிந்தனர்
/
பழநியில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : மார் 09, 2026 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: வார விடுமுறையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏராளமான வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ரோப் கார், வின்ச்சில் செல்வோர் பல மணி நேரம் காத்திருந்தனர்.
கோயிலில் பொது மற்றும் கட்டண வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் வழி பிரகாரத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க தரைவிரிப்பு அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

