பழநியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழநியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : ஏப் 19, 2026 05:51 PM

அ நிறம் | அளவு
பழநி:பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வார விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
கோயிலுக்கு செல்ல ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் ஐந்து மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர். வெயில் அதிகமாக இருந்ததால் கிரிவீதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
பக்தர்களின் வாகனங்கள் முக்கிய ரோடுகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
