/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாரல் மழையில் வந்த பாதயாத்திரை பக்தர்கள்
/
சாரல் மழையில் வந்த பாதயாத்திரை பக்தர்கள்
ADDED : ஜன 12, 2026 06:46 AM

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள், சாரல் மழையில் பாதுகாப்பு இன்றி வருகின்றனர்.
இக்கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று நாள் முழுவதும் சாரல் மழை பெய்தது. பாதயாத்திரை பக்தர்கள் சாலைகளில் பக்தி பாடல்கள் பாடி ஆட்டம், ஆடி நடந்து வந்தனர். மேலும் சில இடங்களில் பாதயாத்திரைக்கான வழிகள், சேதமடைந்து உள்ளன. இதனால் பக்தர்கள் ரோட்டில் இறங்கி நடக்கும் நிலை ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாக வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
பாதயாத்திரை பாதையில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

