/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் இரவில் தங்கிய இடைப்பாடி பக்தர்கள்
/
பழநி கோயிலில் இரவில் தங்கிய இடைப்பாடி பக்தர்கள்
ADDED : பிப் 20, 2025 02:16 AM

பழநி:பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி ஸ்ரீ பர்வத ராஜகுல காவடி குழுவினர் இரவில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் தைப்பூசம் நிறைவடைந்த உடன் சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை சேர்ந்த ஸ்ரீ பர்வத ராஜகுல மக்கள், இளநீர், மயில், பால் உள்ளிட்ட பல்வேறு காவடிகளுடன் பாத யாத்திரையாக வருவர். அதன் படி வந்த அவர்கள் நேற்று காவடிகளை மானுார் சண்முக நதிக்கு கொண்டு வந்தனர். அங்கு பூஜைகள் நடந்த பின் பெரியநாயகி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவடிகளுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். அதன் பின் பழநி முருகன் கோயிலுக்கு சென்று காவடிகளை செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு கோயில் வெளிப்பிரகாரத்தில் தங்கினர். இன்று சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர்.

